சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக இன்று (செப்.24) தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையோ அரசு அறிவிப்போ இதுவரை வெளியாகவில்லை. பட்டினப்பாக்கத்தில்...
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 22-ஆம் தேதி கடந்த 24 மணி நேரத்தில் 301 பேருக்கு புதிதாக டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின்...
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (செப்.22) விரிவுபடுத்தி...
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. சென்னை திருவான்மியூர் காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் காலை 8.30...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக எழுந்த புகாரில், திமுக ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (செப்.19) வெளியிடப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் 27 பேரும், தாராபுரத்தில் 22 பேரும் களத்தில் உள்ளனர். மதுராந்தகத்தில் 28 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்த நிலையில்,...
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து (AAI) வேறு நிறுவனத்துக்கு மாற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியதாக வெளியாகியுள்ள தகவலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் புகழ் வணக்கம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் SP வேலுமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைவருக்கும் சம உரிமை கிடைக்கவும், சமத்துவ...
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து மொத்தம் 58 வேட்பாளர்களின் மனுக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன....
காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இன்று உடல்குறைவால் சிவகங்கையில் காலமானார். அவருக்கு வயது 78. சிவகங்கை மாவட்டம் ஏரியூரைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், சட்டம் பயின்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து...