தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. சென்னை திருவான்மியூர் காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் காலை 8.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்கு முன்பாக சத்தான காலை உணவு வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதல் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















