மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
குரலால் கம்பீரத்தையும், பார்வையால் உணர்ச்சிகளையும் திரையில் செதுக்கி, ஏற்ற கதாபாத்திரங்களுக்கெல்லாம் உயிர் கொடுத்த ஒப்பற்ற கலைஞர், நடிப்புச் சக்கரவர்த்தி, நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான கலைப்பணிகளையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
தமிழ்த் திரையுலகில் அவர் பதித்த தடமும், நடிப்பால் படைத்த சாதனைகளும் தலைமுறைகள் கடந்தும் என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.





















