ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் ஆண்கள் அணிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழக வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
தனிநபர் மற்றும் அணிப் பிரிவுகளில் பதக்கங்களை வென்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர்கள், வரும் காலங்களிலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.





















