சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை இன்று (அக்.1) முதல் ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு வணிக சிலிண்டரின் விலை சுமார் ரூ.2,984 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள் மற்றும் கேண்டீன்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் சமையல் எரிவாயு செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் அதன் விலை ரூ.957.50 ஆகவே தொடர்கிறது.





















