தமிழகத்தில் நாளை (அக். 4) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 9 வரை பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரக்கூடும். இன்று குமரிக்கடல், கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





















