தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து மொத்தம் 58 வேட்பாளர்களின் மனுக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இடைத்தேர்தலில் அதிமுக , தவெக, திமுக, , நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி முன்னணியின் கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 முக்கியத் தரப்புகள் களமிறங்குவதால் 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. அதிமுக சார்பில் கணிதா சம்பத் மற்றும் கே. பானுமதியும் , தவெக சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்யபாமா போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் ஐ. பரந்தாமன் மற்றும் எஸ். சுகன்யாவும், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி மற்றும் சிபிஐ – சிபிஐ(எம்) இடதுசாரி கூட்டணியும் தனித்தனியாக வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன. வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு செப்டம்பர் 18 மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு முடிந்து, அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் இடையே இந்த இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





















