இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் புகழ் வணக்கம் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் SP வேலுமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைவருக்கும் சம உரிமை கிடைக்கவும், சமத்துவ சமுதாயம் உருவாகவும் சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்து, அயராதுப் பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுதினத்தில் அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















