திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் பகுதியில் வயல்வெளியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பது தெரியவந்துள்ளது.
அருணா உறவினர் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், மர்ம நபர்களால் முகத்தில் ஆசிட் ஊற்றியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் கிடைத்த செல்போனை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
சொத்து தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


















