தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் பைக்கில் சென்றபோது தாக்கிய இளைஞர் ஆகாஷ் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 38 பேர் மீது தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த இளைஞர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்படி இளைஞர் ஆகாஷ் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தஞ்சாவூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கைதான இளைஞர் ஆகாஷ் ஒருநாள் நீதிமன்ற காவலுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
















