ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4×100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் இந்திய அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4×100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்தச் சாதனையைப் படைத்துள்ள வீரர்கள், வரும் காலங்களிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து தாய்நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்





















