ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாமன்னர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக வீரத்துடன் போராடியதுடன், மக்களிடையே விடுதலை உணர்வையும் தன்னுரிமைச் சிந்தனையையும் விதைத்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு எஸ்.பி. வேலுமணி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீர முழக்கமிட்டு, தாய்மண்ணின் இறையாண்மையையும், தன்னுரிமையையும் காக்கத் தங்கள் இன்னுயிரையே ஈகம் செய்து, விடுதலை வேட்கையை விதைத்த வீரத்தின் திருவுருவங்கள், மாமன்னர்கள் மருது சகோதரர்களின் நினைவுதினத்தில், அவர்களின் தியாகத்தையும், தீரத்தையும் நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகின்றேன்.”
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.





















