• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

October 23, 2026
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: காலையில் சரிவு… மாலையில் உயர்வு!

5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைவு

October 23, 2026
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே நாளை முதல் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் ரயில் சேவை இன்று தொடக்கம்!

October 23, 2026
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 23, 2026
மின்வெட்டை சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல்

வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 4வது டெண்டர் வெளியிட்டது மின்சார வாரியம்!

October 23, 2026
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – அக்டோபர் 26-ல் புயலாக வலுப்பெற வாய்ப்பு

October 23, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

சன்னரக அரிசி என்ற பெயரில் ரேஷன் அரிசியை ரூ.30-க்கு விற்பதா? – டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

October 23, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

2027ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு – தமிழக அரசு அறிவிப்பு!

October 22, 2026
பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 22, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

October 22, 2026
சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

சென்னை புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பியோட்டம்

October 22, 2026
சென்னை லைட்ஹவுஸ் முதல் அடையாறு பாலம் வரை உயர்மட்ட சாலை

சென்னை லைட்ஹவுஸ் முதல் அடையாறு பாலம் வரை உயர்மட்ட சாலை

October 22, 2026
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி! 2 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி! 2 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை!

October 22, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, October 23, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

by admin1
October 23, 2026
in தமிழகம்
0
கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவையில் சாதிய பாகுபாடு காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கௌசல்யாதேவி தம்பதியின் மகன் அகிலன் (16). இவர் பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளியில் மாணவர்களிடம் கல்வி உதவித்தொகை தொடர்பான விவரங்களைச் சேகரித்தபோது, ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் உணவுப் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அகிலனைச் சக மாணவர்கள் சிலர் சாதிய ரீதியாக கேலி செய்ததாகவும், அவரை ஒதுக்கி வைத்ததாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவரின் தாயார் கௌசல்யாதேவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி மாணவர் அகிலன் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார், வகுப்பாசிரியர் விஜயகுமார் மற்றும் சக மாணவர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, வகுப்பாசிரியர் விஜயகுமாரை அக்டோபர் 22-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும், மாணவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று (அக்டோபர் 23) பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் வகுப்பாசிரியர் விஜயகுமார் ஆகிய இருவரையும் பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் 15 நாட்களுக்கு சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Share196Tweet123
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

October 23, 2026
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: காலையில் சரிவு… மாலையில் உயர்வு!

5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைவு

October 23, 2026
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே நாளை முதல் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் ரயில் சேவை இன்று தொடக்கம்!

October 23, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.