வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் ‘அர்னாப்’ புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (அக்டோபர் 24) காலை 5.30 மணியளவில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இந்த அமைப்பு இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை (அக்டோபர் 25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி காலைக்குள் மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது





















