• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

September 12, 2022
ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: விமானக் கட்டணம் 3 மடங்கு உயர்வு

விமான எரிபொருள் வாட் வரி குறைப்பு: சென்னையில் 16%, பிற விமான நிலையங்களில் 1%

October 24, 2026
யுபிஐ-ன் பிரம்மாண்ட வளர்ச்சி ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று – பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாளை உத்தரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்குப் பயணம் – முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்!

October 24, 2026
மருது சகோதரர்களின் நினைவு தினம்: தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் – எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி!

மருது சகோதரர்களின் நினைவு தினம்: தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் – எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி!

October 24, 2026
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி! 2 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை!

பறவைக் காய்ச்சலால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மீண்டும் திறப்பு

October 24, 2026
2-வது டி20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி! தொடரில் 2-0 என முன்னிலை

2-வது டி20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி! தொடரில் 2-0 என முன்னிலை

October 24, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பத்திரப் பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

October 24, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகிறது ‘அர்னாப்’ புயல் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

October 24, 2026
கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

கோவையில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

October 23, 2026
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: காலையில் சரிவு… மாலையில் உயர்வு!

5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைவு

October 23, 2026
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே நாளை முதல் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் ரயில் சேவை இன்று தொடக்கம்!

October 23, 2026
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 23, 2026
மின்வெட்டை சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல்

வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 4வது டெண்டர் வெளியிட்டது மின்சார வாரியம்!

October 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, October 25, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்

by Namadhu Amma
September 12, 2022
in சிறப்பு செய்திகள்
0
125 எம்.எல்.ஏக்களின் பெயர்களை பேப்பர் இல்லாமல் சொல்ல முடியுமா-ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் பகிரங்க சவால்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

தற்போது இந்த ஆட்சி மக்களுக்கு போனஸ் அளித்துள்ளது. மின்சாரத்தில் போனஸ் அளித்துள்ளது. மிகப்பெரிய போனஸ் அளித்துள்ளார். வருடத்திற்கு 15 ஆயிரம் வருவாய் வரும் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.

12 சதவீதத்திலிருந்து 52 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 6 சதவீதத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று அதற்கும் அனுமதி அளித்து விட்டார்கள். மூன்று ஆண்டுகள் கழித்து 2026 ல் 52 மின் கட்டணம் உயர்ந்து விடும். அதுமட்டுமல்லாமல் சொத்துவரியை உயர்த்தி விட்டார்கள்.

கடைகளுக்கு 150 சதவீதத்தை உயர்த்தி விட்டார்கள். மக்களிடத்திலிருந்து இந்த அரசு சுரண்டுகிறது. ரத்தத்தை உறிஞ்சுகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கொரோனா தொற்று இருந்த இரண்டு வருடத்தில் வேலைவாய்ப்பு கிடையாது. வருவாய் இல்லை.

கடையில் வியாபாரம் இல்லை. மக்கள் நொந்துபோய் வாழ வழியில்லாமல் விழி பிதுங்கி இருக்கும் இந்த வேளையில் மக்கள் மீது பெரிய சுமையை சுமத்தியுள்ளார்கள். சொத்துவரி என்ற சுமை. மின் கட்டணம் என்ற சுமை. விரையில் பஸ் கட்டண சுமையும் வரப்போகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படி சொத்து வரி போனஸ், மின் கட்டண போனஸ் எல்லாம் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

மக்களைப்பற்றி கவலைப்படாத ஒரு முதலமைச்சர் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் பேசும் போது ஒன்றை சொன்னார். எடப்பாடி பழனிசாமிக்கு அவருடைய எம்.எல்.ஏவே அடையாளம் தெரியாது என்று சொன்னார்.

எனக்கு அனைத்து எம்.எல்.ஏவையும் அடையாளம் தெரியும். உங்களைப்போல பக்கத்தில் யாரும் வரக்கூடாது. தூரமாக சென்று நிற்க வேண்டும். என்னை இப்போது கூட்டத்தில் நசுக்கி எடுத்து விட்டார்கள். அவரை (ஸ்டாலினை) எங்காவது கூட்டத்தில் விட்டால் போதும். ஒரு நசுக்கு நசுக்கினால் போதும். இந்த கூட்டத்திலே இப்போது இருக்கும் முதலமைச்சர் நடந்து சென்றாலே வெற்றி தான் அவருக்கு.

எனக்கு அனைத்து எம்எல்ஏவையும் நன்றாக தெரியும். நான் முதலமைச்சராக இருக்கும் போதும் சரி, இப்போதும் சரி எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியை குறிப்பிட்டு பெயரை உச்சரிக்க முடியும். உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் 125 பேர் இருக்கிறார்கள். தொகுதியை குறிப்பிட்டு பெயரைச்சொல்ல முடியுமா. சவால் விடுகிறேன்.

படிக்காமல், பேப்பரை பார்க்காமல் சொல்ல வேண்டும். பேப்பரை பார்த்து படிக்கக்கூடாது. நீங்கள் எங்களைப்பற்றி கேலி கிண்டல் பேசுகிறீர்கள். நான் இந்த கட்சிக்கு டெம்பர் வரியாம். நான் டெம்பரவரி இல்லை. தி.மு.கவில் செயல் தலைவராக இருந்த ஒரே தலைவர் ஸ்டாலின் தான். இதுவரையில் திமுகவில் செயல் தலைவரே கிடையாது.

கருணாநிதி உடல் நலமில்லாமல் இருந்த போதும் சரி, பேச முடியாமல் இருந்த போதும் கூட கட்சி தலைவர் பதவியை மகனுக்கு கூட தரவில்லை ஸ்டாலினுக்கு கொடுத்தாரா? படுத்த படுக்கையில் இருந்தபோது கூட ஸ்டாலினை கருணாநிதி நம்பவில்லை. ஆகவே தான் செயல் தலைவர் பதவியை தந்தார்கள்.

ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண விவசாயி கூட முதலமைச்சராக முடியும். உயர்ந்த பதவிக்கு வர முடியும். இது அதிமுவில் மட்டும் தான் முடியும். வேறு எந்த கட்சியிலும் நடக்காது. ஜனநாயகமான கட்சி அதிமுக மட்டும் தான். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். திமுகவில் அதுபோல நடக்குமா?

திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு யார் வேண்டுமானாலும் தலைவராக வர முடியும் என்று ஸ்டாலினால் கூற முடியுமா? அ.தி.மு.க பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் தோற்றுவித்த கட்சி. புரட்சித்தலைவி அம்மா வளர்த்த கட்சி. மீண்டும் ஆட்சி அமைப்போம். கழகத்திற்கு ஏற்பட்ட சோதனைகளை சாதனைகள் ஆக்கிய கட்சி அ.தி.மு.க.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: விமானக் கட்டணம் 3 மடங்கு உயர்வு

விமான எரிபொருள் வாட் வரி குறைப்பு: சென்னையில் 16%, பிற விமான நிலையங்களில் 1%

October 24, 2026
யுபிஐ-ன் பிரம்மாண்ட வளர்ச்சி ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று – பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாளை உத்தரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்குப் பயணம் – முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்!

October 24, 2026
மருது சகோதரர்களின் நினைவு தினம்: தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் – எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி!

மருது சகோதரர்களின் நினைவு தினம்: தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் – எஸ்.பி. வேலுமணி புகழஞ்சலி!

October 24, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.