• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை-முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

January 26, 2022
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, September 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை-முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

by Namadhu Amma
January 26, 2022
in சிறப்பு செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

திருப்பூர் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் இறந்ததற்கு தி.மு.க.வினரின் மணல் திருட்டு தான் காரணம். எனவே தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், மாம்பறை பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் தாராபுரம் அமராவதி ஆற்றின் புதுப்பாலம் பகுதியில் வரும்போது வாகனத்தை நிறுத்திவிட்டு அமராவதி ஆற்றில் இறங்கி குளித்ததில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பதும், அதற்கு காரணம் தி.மு.க.வினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டது தான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிப்பதும் என்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாதம் 17-ந் தேதி திருப்பூர் இடுவாய் கிராமம் அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்த அமிர்தகிருஷ்ணன், ஸ்ரீதர், யுவன், மோகன், சக்கரவர்மன், ரஞ்சித், ஜீவா மற்றும் சரண் ஆகிய எட்டு பேர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதி ஆற்றில் இறங்கி குளித்ததாகவும்,

இவர்களில் ஜீவா மற்றும் சரண் தவிர எஞ்சிய ஆறு பேரும் ஆற்றில் மூழ்கி பலியாகிவிட்டதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கிய ஆறு பேர்களின் உடல்களை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும்,

இவர்களை காப்பாற்ற முயன்று படுகாயமுற்ற ஜீவா மற்றும் சரண் ஆகியோர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விபத்திற்கு காரணம் சம்பவம் நடந்த பகுதியில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சரும் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியதாகவும், முதல்வரின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு அறிவுரை வழங்கியதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை எந்தவித நிவாரண உதவியும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில், விபத்திற்கு வேறுவிதமான காரணங்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்களும், அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர். அதாவது, அண்மையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கு முன்பு மாணவர்கள் குளித்த பகுதியில் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணீர் இருந்ததாகவும், ஆழமான பகுதியாக அது இல்லை என்றும்,

தண்ணீர் குறைவாக இருந்த சமயத்தில் சுமார் இருபது அடி ஆழத்திற்கு தி.மு.க.வினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டதாகவும், பின்னர் ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டவுடன் அந்த பகுதி ஆழமான பகுதியாகி விட்டதாகவும், இந்த மணல் திருட்டுதான் அப்பாவி மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்றும், இதனை மூடி மறைக்கும் பணியில் ஆளும் கட்சியினரும், அரசு நிர்வாகமும் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

மாணவர்களின் உயிரிழப்புக்கு திருட்டு மணல் அள்ளப்பட்டதும், அதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்ததும்தான் காரணம் என்பதாலும், உயிரிழந்தவர்களை சேர்ந்த அனைத்து குடும்பங்களும் மிக ஏழ்மை நிலையில் உள்ளதாலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்து குடும்பங்களும் இளம் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு தவித்து கொண்டிருக்கின்றன.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, இளம் பிள்ளைகள் உயிரிழப்புகளுக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து தீர விசாரித்து தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழ

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.