• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பதா?தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

January 26, 2022
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, September 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பதா?தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

by Namadhu Amma
January 26, 2022
in சிறப்பு செய்திகள்
0
உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய திருநாட்டிலுள்ள மாநிலங்களின் தலைநகரங்கள், முக்கிய துறைமுகங்கள், பெரிய தொழிற்சாலைகள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றை இணைக்கும் பணியினையும், அதன்மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு குறைந்த நேரத்தில் பயணிக்கவும் தேசிய நெடுஞ்சாலைகள் உதவுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டு பணி, விரிவுபடுத்தும் பணி, பராமரிப்பு பணி போன்றவை மத்திய அரசின் நிதி வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த பணிகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் தெரிவிப்பதும், ஒத்துழைப்பு தருவதாக முதலமைச்சர் பதிலளிப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

அண்மையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், தமிழ்நாட்டில் எந்தெந்தவிதமான சாலை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான ஒட்டுமொத்த திட்டங்கள் கூட தரப்படுவதில்லை என்றும், தமிழ்நாடு அரசின் அனுமதி பெறுவது என்பது மிகக் கடினமாக இருப்பதாகவும், இவையெல்லாம் அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கப்படவேண்டிய ஒன்று என்றும், அதிகாரிகள் அதுகுறித்து முடிவு எடுத்து தெரிவிக்காததன் காரணமாக அந்த பணிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளன என்றும்,

இது குறித்து முதலமைச்சர், அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், அனைத்து சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பல்வேறு சாலை பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கேரள மாநிலத்தின் முதலமைச்சர் சாலை பணிகளை மேற்கொள்வதற்கான சாதகமான முடிவுகளை உறுதியாக எடுப்பது மத்திய அரசுக்கு உதவிகரமாக இருப்பதாகவும், இது கேரள மாநிலத்திற்கு நிறைய திட்டங்கள் கிடைக்க வழிவகுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் இந்த அளவுக்கு வருத்தப்பட்டு சொல்வதை பார்க்கும்போது, தி.மு.க. அரசு விழிப்புடன் செயல்படவில்லையோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுகின்றது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது மாநில அரசின் நிதி, மத்திய அரசின் வரிப் பகிர்வு, மத்திய அரசின் நிதியுதவி, வங்கிகளிலிருந்து பெறப்படும் கடன் அனைத்தையும் உள்ளடக்கியது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசிடமிருந்து அதிக நிதியை பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பதாகும்.

அரசியலை புறந்தள்ளி விட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதால் தான், பல்வேறு சாலை வசதிகள், சுகாதார திட்டங்கள், ஒரேயாண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்பட்டன.

இதுதான் கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதைவிடுத்து, தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களில், தமிழக மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களில் ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. மாறாக கடும் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு செய்தால், தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்படுகின்ற நிதி மற்ற மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை, கட்டமைப்புகளை பின்னோக்கித் தள்ளுவதற்குச் சமம்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என்று கூறியிருக்கிறார்.

இது ஓரளவுக்கு ஆறுதலை அளிக்கிறது என்றாலும், இதுபோன்ற விமர்சனங்கள் வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்து தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.