• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்தால் பொய் வழக்கு போடுவதா? விடியா தி.மு.க. அரசுக்கு எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

January 19, 2022
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, September 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்தால் பொய் வழக்கு போடுவதா? விடியா தி.மு.க. அரசுக்கு எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

by Namadhu Amma
January 19, 2022
in தமிழகம்
0
2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 8 மாதகால விடியா திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும், பொது வெளியில் காவல் துறையினரிடம் மரியாதை குறைவாக நடப்பது மிகவும் அதிகரித்துள்ளது. பல நிகழ்வுகளில் காவலர்கள் தாக்கப்படும் காட்சிகள், காவல் நிலையத்திலேயே சர்வ சாதாரணமாக அதிகாரிகள் மிரட்டப்படும் சம்பவங்கள், சமூக, செய்தி ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதே நேரம், குற்ற வழக்குகளில் ஈடுபடுவோரை பிடிக்கும் ஒருசில காவலர்கள், அவர்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த நிகழ்வுகளும், சமூக, செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வந்த வண்ணம் உள்ளன.

இதற்கு காரணம் காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவதால் ஏற்படும் மன அழுத்தம்தான். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின்

மன அழுத்தத்தைக் குறைக்க, மாண்புமிகு அம்மாவின் அரசு பெங்களூரு நிம்மான்ஸ் என்ற மருத்துவமனையுடன் இணைந்து காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி திட்டம் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் காவலர்களை சட்டப்படி பணியாற்ற அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், இந்த விடியா அரசு வாய் சொல்லில் வீரரடி என்பது போல், நேரடியாக புகார்களை வாங்குதல், பெண் காவலர்களுக்கு குறைவான பணிச் சுமை, வார விடுமுறை போன்ற பலவற்றை செய்வதாக கூறினாலும், நடைமுறையில் இவை எதுவுமே கடைபிடிக்கப்படுவதில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

அரசியல் அழுத்தம், பொது வெளியில் ஒருசில காவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சுதந்திரமாக செயல்பட முடியாத நிலைமை, உயர் அதிகாரிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விரைவாக முடிவு காணுங்கள் என்று தனக்கு கீழ் உள்ள காவலர்களுக்கு அழுத்தம் தருதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் காவலர்கள், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தங்களது வெறுப்பை காட்டும் நிலைமை ஏற்படுவதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நான், ஏற்கெனவே 7.12.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட ஒருசில சம்பவங்களை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


*   மதுரையில் உறவினர்களுடன் வந்த இளம் பெண்ணை மிரட்டி காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது.
*   கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர்,
உடன் பணிபுரியும் காவலர்கள் மீதே புகார் கூறி தற்கொலைக்கு முயன்றது.
*   விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் போலீசார் தாக்கியதால் வியாபாரி உலகநாதன் இறந்து விட்டதாக காவலர்கள் மீது புகார்.
*  ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே நீர்கோழி ஏந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவன் மணிகண்டன் காவல் நிலைய விசாரணைக்கு பிறகு, வீட்டில் மர்மமான முறையில் இறந்ததாக புகார்.
*  திருத்தணியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த நந்தன் என்பவர் மீது ஜாமீனில் வெளிவர இயலாதபடி, வழக்கினை திருத்தணி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இதை அறிந்த அவரது மகன் திரு. பாபு என்கிற குப்புசாமி தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார். தரமற்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தவறை சுட்டிக் காட்டியவர் மீதே காவல் துறை ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்ததால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்கள் பெரும்பாலானவை தரமற்றதாக உள்ளதாக அனைத்து இடங்களிலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

*  8.1.2022 அன்று சேலம் மாவட்டம், கருப்பூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரனை, வழக்கு சம்பந்தமாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய காவலர்கள் விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும், பிறகு 11-ந் தேதி அவரை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்ததாகவும், 12-ந் தேதி காலை மாற்றுத் திறனாளி பிரபாகரன் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அன்றே அவர் உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையில் இறந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததுடன், மாற்றுத் திறனாளியின் இறப்புக்கு காரணமான காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் சரக டி.ஐ.ஜி., சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

12-ந் தேதி நடைபெற்ற, இந்த மாற்றுத் திறனாளியின் மரணம் பற்றிய செய்தி 16-ந் தேதிவரை மக்களை சென்றடையாமல் இந்த விடியா அரசும், காவல் துறையும், ஊடகங்களும் நடந்து கொண்ட முறையை பார்க்கும் போது, பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசுபவர்கள், தமிழ் நாட்டில் இருந்து மறைந்து விட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது.

* அதே போல், சென்னையில் முகக் கவசம் அணியாத சட்ட கல்லூரி மாணவர் மீது அபராதம் விதித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவலர்கள், அந்த மாணவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாக செய்திகள் வருகின்றன. இது போன்ற நிகழ்வுகளின் எல்லை மீறல்தான் காவல் நிலைய இறப்புகளாக மாறிவிடும் சூழ்நிலையை உருவாக்குகின்றன.

சேலம் மாவட்டம், கருப்பூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரனின் இறப்புக்கு, தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இந்த விடியா அரசின் தவறினால், தனது இன்னுயிரை இழந்த திருத்தணி குப்புசாமியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்

மேலும், நான் ஏற்கெனவே கூறியபடி, காவல் துறையில் நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சரியான பணியிடங்களை வழங்குங்கள். சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துங்கள். தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். மேலும், உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் இந்த விடியா அரசை கண்டிக்கிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.