சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற TNPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மதுரை அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 182 ரன்கள் குவித்து, மதுரை அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கோவை வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான ஸ்கோரைப் பெற்றுத் தந்தனர்.
183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, கோவை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 14.2 ஓவர்களில் 98 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மதுரை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை அணி TNPL கோப்பையைத் தட்டிச் சென்றது. இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிய மதுரை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.


















