மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் பங்கேற்பில் நடைபெற்ற நிகழ்ச்சியிலேயே இந்த நடைமுறை பின்பற்றப்படாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தனியார் பள்ளியின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் சார்பில் “Say No To Drugs” என்ற தலைப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி தொடங்கியபோது முதலில் பள்ளிப் பாடல் பாடப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கடவுள் வாழ்த்து பாடப்பட்டதாகவும், அதன் பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


















