கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உள்பட அனைவரையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரனின் எம்எல்ஏ அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஒரு மாத காலத்துக்கு முன்னால் எங்களுக்கு கொடுத்த பதவிகளை வேண்டாம், நாங்கள் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம்.
பொதுக்குழுவைக் கூட்டி தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்று சொல்லியிருந்தோம். கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் உள்படஅனைவரையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்





















