தனது துள்ளலான இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்து, தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவையொட்டி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, தேவா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.





















