வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுண்டாக்காமுத்தூரில் இருந்து செங்குளம் செல்லும் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக முன்னணி நிர்வாகியுமான எஸ்.பி. வேலுமணி, சுண்டாக்காமுத்தூர் பகுதிக்குச் நேரில் சென்று கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழையால் கால்வாயில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தை நேரில் ஆய்வு செய்த அவர், அப்பகுதியின் நீர்நிலை மற்றும் கால்வாயின் தற்போதைய நிலவரம் குறித்து பார்வையிட்டார்.





















