கேபரேட் தோற்றத்தில் அசத்தல்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் நடித்து வரும் படம் ‘லவ் & வார்’. 2027-ம் ஆண்டு வெளியாக உள்ள இந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில், ஆலியா பட்டின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. இதில், அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான நியூ ஜெனரேஷன் கேபரேட் தோற்றத்தில் காட்சியளித்துள்ளார். முதல் போஸ்டரில் ஸ்லிட் ஸ்கர்ட் அணிந்து நாற்காலியில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள அவர், மற்றொரு போஸ்டரில் மின்னும் கேபரேட் மேடையின் பின்னணியில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலிக்கே உரிய பிரம்மாண்டமான கலை வடிவமைப்பு மற்றும் அழகியல் இந்த போஸ்டர்களிலும் பிரதிபலித்துள்ளது. ஆலியா பட்டின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 21-ந்தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.





















