சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலையில் தீரன் சின்னமலை அவர்களின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கும், வளாகத்தில் உள்ள அவரது திருவுருவசிலைக்கும் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி அவர்களின் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன், கழக அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக பொறுப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ், கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுச்சாமி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதரன், ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் இரா.மனோகரன், மாவட்ட கழக அவைத்தலைவர் பி.சி.ராமசாமி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் பி.ஹரி பாஸ்கர், கழக கொள்கைபரப்பு துணை செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, தோப்பு அசோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.வுமான வி.பி.சிவசுப்பிரமணி, கரூர் மாவட்ட கழக செயலாளர் கே.கமலக்கண்ணன், முன்னாள் எம்.பி.எஸ். செல்வக்குமார சின்னையன்,மு ன்னான் எம்.எல்.ஏக்கள் ஆர்.என்.கிட்டுசாமி, கே.எஸ்.தென்னரசு, ஏ.பண்ணாரி, கே.சி.பொன்னுதுரை, சூலூர் கந்தசாமி, மாநில நிர்வாகிகள் ஏ.எம்.சிவபிரசாத், ஜி.எம்.விவேகானந்தம் உள்பட மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்





















