சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
2025–26ஆம் ஆண்டுக்கான இந்த அறிவிப்பின்படி, தகுதியுள்ள ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியமும், 11.67% கருணைத் தொகையும் வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத நிறுவனங்களில் 10% வழங்கப்படும்.
இதன் மூலம் 2,60,497 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.367.20 கோடி வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.




















