பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஆறு வகையான பிரசாதங்களின் விலையை உயர்த்தக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய விலை உயர்வு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வைக் காரணமாகக் குறிப்பிட்டு இந்த விலை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைப் பட்டியல்:
- லட்டு (50 கிராம்) – ரூ.20
- அதிரசம் (50 கிராம்) – ரூ.20
- முறுக்கு (50 கிராம்) – ரூ.25
- தேன் தினைமாவு (50 கிராம்) – ரூ.15
- சர்க்கரைப் பொங்கல் (150 கிராம்) – ரூ.20
- புளியோதரை (150 கிராம்) – ரூ.20
இதுவரை ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெரும்பாலான பிரசாதங்களின் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. முறுக்கின் விலை ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது.




















