நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது என நேபாள போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் 977 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது.
















