வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, இன்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘அர்னாப்’ புயலாக உருவானது.
இதன் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 முக்கியத் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அர்னாப் புயலின் தாக்கத்தை முன்னிட்டு, 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட துறைமுகங்கள்:
- சென்னை துறைமுகம்
- எண்ணூர் துறைமுகம்
- காட்டுப்பள்ளி துறைமுகம்
- கடலூர் துறைமுகம்
- நாகப்பட்டினம் துறைமுகம்
- பாம்பன் துறைமுகம்
- தூத்துக்குடி துறைமுகம
- புதுச்சேரி துறைமுகம்
- காரைக்கால் துறைமுகம்
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு மீன்வளத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.




















