• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மண்டாடி  திரைப் படத்தின் வெற்றி விழா

மண்டாடி திரைப் படத்தின் வெற்றி விழா

September 19, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழக ஸ்குவாஷ் வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

காமராஜருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 2, 2026
அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

அகிம்சை, வாய்மை ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

October 2, 2026
“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

“நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழஞ்சலி

October 1, 2026
கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

கத்திக்குத்து காயத்துடன் 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!

October 1, 2026
“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

“நாளை கடைகளில் UPI கிடையாது! ரொக்கப் பணம் மட்டும் – வணிகர் சங்கம் அறிவிப்பு”

October 1, 2026
பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

பட்டாசுக்கு முழுத் தடை வேண்டாம்; கட்டுப்பாடுகளுடன் அனுமதி – உச்ச நீதிமன்றம்

October 1, 2026
சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு – ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று!

சென்னையில் டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு – ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று!

October 1, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Entertainment

மண்டாடி திரைப் படத்தின் வெற்றி விழா

by Admin
September 19, 2026
in Entertainment, Movie, தமிழகம்
0
மண்டாடி  திரைப் படத்தின் வெற்றி விழா
515
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எல்ரெட்குமார் தயாரித்துள்ளார்.

‘மண்டாடி’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட்குமார், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, நடிகர்கள் சூரி, மஹிமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மண்டாடி வெற்றியை கொண்டாடுவோம் : வெற்றிமாறன்

‘மண்டாடி’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ஒரு படத்தின் வெற்றிக்கு மக்களின் ஏற்பே முக்கியம் என்றும், அவர்கள் கொண்டாடும்போது நாமும் அதை கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் எல்ரெட்குமாரின் சினிமா மீதான அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், இயக்குநர் மதிமாறனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கியதற்கும் நன்றி தெரிவித்தார். மேலும், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வெற்றியை அடைந்துள்ள நிலையில், மதிமாறன் இனி நிதானமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நடிகர் சூரியின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய வெற்றிமாறன், சூரியை மக்கள் தங்களில் ஒருவராகவும், அவரது வெற்றியை தங்களது வெற்றியாகவும் கொண்டாடுவதாக குறிப்பிட்டார். மக்களின் அன்பை சூரி தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மதிமாறனின் ஒழுக்கமும், சூரியின் அடக்கமும் பாராட்டுக்குரியது: எல்ரெட்குமார்

‘மண்டாடி’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் எல்ரெட்குமார், இயக்குநர் மதிமாறனின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் திட்டமிட்ட செயல்பாட்டை பாராட்டினார். திரைக்கதையில் உள்ளதை மட்டுமே படமாக்கியதுடன், பல்வேறு தொழில்நுட்ப சவால்களையும் மதிமாறன் சிறப்பாக கையாண்டதாக தெரிவித்தார்.

‘மண்டாடி’ திரைப்படம் தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறிய அவர், படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் பேசப்படுவது குறிப்பிடத்தக்க மாற்றம் என்றார். வணிகப் படங்களுக்கான வழக்கமான அம்சங்கள் இல்லாமலேயே இப்படம் நல்ல வசூலை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நடிகர் சூரியின் கடின உழைப்பு மற்றும் அடக்கத்தை பாராட்டிய எல்ரெட்குமார், படப்பிடிப்பில் உடல்நிலை சோர்வாக இருந்தபோதும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்தார். சுஹாஸ், மஹிமா நம்பியார், பால சரவணன், பீட்டர் ஹெய்ன், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினரின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

 ‘மண்டாடி’ கதாபாத்திரம் மறக்க முடியாதது: மஹிமா

 ‘மண்டாடி’ படத்தின் கதைநாயகி மஹிமா பேசுகையில், முதலில் தனது கதாபாத்திரத்தை ஏற்க தயக்கமும் பயமும் இருந்ததாக தெரிவித்தார். இயக்குநர் மதிமாறன் சவால்களை எதிர்கொள்ள தயாரா என கேட்டபோது, தான் தயாராக இருப்பதாக கூறி கதாபாத்திரத்தை ஏற்றதாக தெரிவித்தார்.

இந்த கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக கூறிய மஹிமா, திரையரங்குகளில் சூரியின் வெற்றியை மக்கள் தங்களது வெற்றியாக கொண்டாடுவது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். படத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி என்றும், இயக்குநர் மதிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட்குமார் ஆகியோருக்கு நன்றி என்றும் கூறினார். பால சரவணன் வரும் காட்சிகளில் ரசிகர்கள் சிரிப்பால் அரங்கை அதிர வைப்பதாகவும் குறிப்பிட்டார்.

சூரி நடித்த முத்துக்காளி கதாபாத்திரம் தனது வாழ்க்கையுடன் நெருக்கமானது  – இயக்குநர் மதிமாறன் புகழேந்தி

படத்தின் வெற்றியை தலைமுறை தலைமுறையாக பாய்மரப்படகு விளையாட்டை பாதுகாத்து வரும் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சமர்ப்பிப்பதாக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி தெரிவித்தார்.

மேலும், ‘மண்டாடி’ உலகத்தை அறிமுகப்படுத்திய நண்பர் சதீஷ், உதவிப் பேராசிரியர் மோகன வசந்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தனது கதையை நம்பி, நடுத்தர பட்ஜெட்டில் தொடங்கிய படத்தை பெரிய படமாக உருவாக்கி, 5 மொழிகளில் வெளியாகும் அளவுக்கு விரிவுபடுத்தியதாக கூறினார்.

சூரி நடித்த முத்துக்காளி கதாபாத்திரம் தனது வாழ்க்கையுடன் நெருக்கமானது என்றும், அந்தப் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்த சூரிக்கு நன்றி என்றும் தெரிவித்தார். சுஹாஸ், மஹிமா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக பங்களித்ததாக கூறிய அவர், பீட்டர் ஹெயின், ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

‘மண்டாடி’ படத்தை கொண்டாடிய அனைவருக்கும் நன்றி: சூரி

‘மண்டாடி’ படத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வரும் ரசிகர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் படக்குழு சார்பில் நடிகர் சூரி நன்றி தெரிவித்தார். இப்படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு நன்றி கூறிய அவர், முத்துக்காளி கதாபாத்திரத்தை இயக்குநர் கூறிய விதத்தில் உள்வாங்கி நடிக்க பல நாட்கள் சிந்தித்து, நண்பர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

தெலுங்கிலும் படம் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்த சூரி, பீட்டர் ஹெயின் மாஸ்டர் மற்றும் அவரது குழுவினரின் கடின உழைப்பை பாராட்டினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் படம் பார்த்து வாழ்த்து தெரிவித்ததையும் நினைவுகூர்ந்தார்.

ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், படப்பிடிப்புக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த சூரி, ‘மண்டாடி’ படத்துக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பதிவுகளும் மனநிறைவை அளிப்பதாக கூறினார்.

Share206Tweet129
Admin

Admin

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.