ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
கல்வியையும் நல்ஒழுக்கத்தையும் போதித்து, நல்வழியில் நம்மை வழிநடத்தி, அறியாமை என்னும் இருளை அகற்றி அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களை எந்நாளும் போற்றி வணங்குவோம்!
முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த சிந்தனையாளரும், தத்துவமேதையும், சிறந்த ஆசிரியருமான, பாரத ரத்னா டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகப் போற்றி, கொண்டாடி மகிழும் இந்நாளில், அவரின் சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகின்றேன்.
மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து, அவர்களை லட்சியப் பாதையில் செலுத்தி, நாட்டின் வளமான எதிர்கால சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பிகளான தியாக உள்ளம் கொண்ட ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .



















