நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 யாத்திரிகர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் பத்திரமாக சென்னை திரும்பினர்.
கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்த இவர்கள், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆபத்தான சூழலில் சிக்கினர். பின்னர் நேபாள ராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து டெல்லி வழியாக சென்னை வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையம் வந்த 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் நேரில் வரவேற்றனர். உறவினர்கள் கண்ணீருடன் அவர்களை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்கள் தாங்கள் எதிர்கொண்ட வெள்ளப் பேரிடர் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட நிலையில், நேபாளத்தில் இன்னும் தொடர்பு கிடைக்காத தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


















