• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு

June 11, 2022
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, September 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு

by Namadhu Amma
June 11, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம்

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் அட்டகாசம், கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டது. எடப்பாடியார் எப்போது மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

விடியா தி.மு.க. அரசை கண்டித்து சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சேலம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன வாயிற் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கியதை, தி.மு.க. அரசு குறைத்து 5 சதவீத ரூ.825 என குறைந்த சம்பள உயர்வு வழங்கி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்த தி.மு.க. அரசை கண்டித்தும்,

போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்தும், 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆட்சியில் ரூ.3500 வழங்கியது போல் வழங்கிட வேண்டி ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும் என கோஷங்களை முழங்கினர்.

இந்த கண்டன வாயிற்கூட்டத்திற்கு சேலம் மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.ஜெயசங்கரன், அ.நல்லதம்பி, கு.சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வாயிற்கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்து பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அண்ணா தொழிற்சங்கம் மட்டுமல்ல பொதுமக்களும் வீதி, வீதியாக போராடும் அவல நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

தேர்தலின் போது 100 நாட்களில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க.வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு பேசுகிறார்கள். 75 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வேண்டும் என்பதற்காகத்தான் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று சொல்லிவிட்டு சேலம் மாவட்டத்தில் 200 பேருந்து வழித்தடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கழக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாரபட்சமில்லாமல் பணிகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அண்ணா தொழில் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழித்தடத்தில் பணிகள் வழங்கி கஷ்டத்தை கொடுக்கிறார்கள்.

2021-ம் ஆண்டு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு எதிராக தி.மு.க.வின் தூண்டுதல் பெயரில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தனர். 23.05.2022-ல் சம்பள உயர்வில் ரூ.825 க்கு மட்டுமே தி.மு.க. அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அதைப்பற்றி கேட்கவே இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகம் முழுவதும் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வன்முறை அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது என்று தி.மு.க.வினரே புகார் தெரிவிக்கின்றனர்.

எடப்பாடியார் எப்போது முதலமைச்சராக வருவார் என்று இன்றைக்கு தி.மு.க.வினரே கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஏனென்றால் தி.மு.க. தொழிற்சங்கத்தினர் அந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நலனை கருதியும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நலனை கருதியும் 3500 பேருந்துகளை கழக அரசின் போது எடப்பாடியார் இயக்கினார். கழக ஆட்சியின் போது எடப்பாடியார் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இன்றைக்கு சேலத்தில் திமுகவை சேர்ந்த ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளார். அவர் சொல்வதைத்தான் போக்குவரத்து பணிமனை இயக்குனர் கேட்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைக்கின்ற ஒரே தொழிற்சங்கத்தினர் அண்ணா தொழிற்சங்கத்தினர் மட்டுமே, மீண்டும் தமிழகத்தை ஆள பிறந்த ஒரே முதலமைச்சராக எடப்பாடியார் தான்.

ஆகவே தொழிற்சங்கத்தினர் மற்றும் கழகத்தினர் அனைவரும் இரவு பகல் என்று பாராமல் உழைத்து மீண்டும் முதலமைச்சர் அரியணையில் எடப்பாடியாரை அமர வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.