தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


















