தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மழையின்போது பலத்த காற்று வீசக்கூடும்


















