• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

கழகத்தினரை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு நினைப்பது நடக்காது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை

June 30, 2022
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

October 6, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

செவிலியர்கள் போராட்டம்: கைது நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

October 6, 2026
ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

October 6, 2026
அக்டோபர் 16-ல் வெளியாகும் ஃபேன்​டஸி திரைப்படமான ‘ட்ரோன்ஸ்’

அக்டோபர் 16-ல் வெளியாகும் ஃபேன்​டஸி திரைப்படமான ‘ட்ரோன்ஸ்’

October 6, 2026
காதல்… கட்டுப்பாடு… பயம்!

காதல்… கட்டுப்பாடு… பயம்!

October 6, 2026
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

October 6, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உரிமைக்காக போராடிய செவிலியர்களை கைது செய்வதா? – அன்புமணி கண்டனம்

October 6, 2026
மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

October 6, 2026
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

“செவிலியர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை கொடூரத்தின் உச்சம்” – எடப்பாடி பழனிசாமி காட்டம்

October 6, 2026
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கழகத்தினரை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு நினைப்பது நடக்காது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை

by Namadhu Amma
June 30, 2022
in தற்போதைய செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்துறையை கையில் வைத்திருக்கின்ற முதல்வர் இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு பிரச்சினை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கொலை, கொள்ளை, பாலியல் கூட்டு பலாத்காரம், இந்தியாவின் கஞ்சா தலைநகராக மாறியுள்ள சென்னை போன்றவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளார்.

அதுபோல ஆன்லைன் ரம்மியால் பல்வேறு நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சூழ்நிலையில் அம்மாவால் ஒழிக்கப்பட்ட லாட்டரி மீண்டும் இன்றைக்கு தலை எடுத்துள்ளது. இதற்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு துணை போய்க்கொண்டுள்ளதாக இன்றைக்கு சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தி.மு.க.வின் காவல்துறை இதனை தடுக்கும் பணியை செய்யாமல், ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகியும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திலே செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக முன்னாள் அமைச்சர், எங்கள் கழகத்தின் முன்னணி தலைவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அவருடைய இல்லம் மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

கழகத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினையில், அவர் இந்த இயக்கத்திற்கு தூணாக நின்று, இந்த இயக்கத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அவரை அச்சுறுத்த வேண்டும், அவரை பணிய வைக்க வேண்டும் என்று யாரோ சொல்லி, அவரை மீண்டும் அச்சுறுத்தல் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்கள்.

கோவையில் ஐஏஎஸ் படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி முகாமை நடத்திக் கொண்டுள்ளார். அவரால் நடத்தப்படுகின்ற அந்த பயிற்சியில் இந்த ஆண்டு கூட இருவர் தேர்வு பெற்றுள்ளார்கள்.

அப்படிப்பட்ட அந்த பயிற்சி முகாமிலே தி.மு.க.வின் காவல்துறை இரண்டு மூன்று நாட்களாக அத்துமீறி நுழைந்து இந்த பயிற்சி முகாம் நடைபெறாமல் தடுத்து கொண்டிருக்கிறது.

அந்த பயிற்சி முகாமில் என்ன இருக்க போகின்றது. அப்படியே சோதனை செய்திருந்தாலும் ஒரு நாளைக்கு மேல் ஒன்றும் இல்லை. ஆனால் அவர்களின் நோக்கம் அதுவல்ல. சோதனையிட வேண்டும் என்றால் அன்றைக்கு 100 இடங்களில் சோதனை செய்த போதே இதையும் அவர்கள் சோதனை செய்திருக்கலாம்.

இப்போது அவர்கள் நோக்கம், எண்ணம் எல்லாம் எப்படியாவது எஸ்.பி.வேலுமணியை அச்சுறுத்தி, பணிய வைத்து, கழகத்தில் உள்ள பிரச்சினைகளை, யாருக்காகவே உதவ வேண்டும் என்பதற்காக இன்றைக்கு தி.மு.க.வுடன் உறவாடிக் கொண்டிருக்கின்ற, இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்ற, இந்த இயக்கத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு துணையாக இருந்து ஸ்டாலின் அரசு எங்களை அச்சுறுத்த பார்க்கின்றது.

பயமுறுத்தப் பார்க்கின்றது. பணிய வைக்க பார்க்கின்றது. இது நடக்காது. கழக தொண்டர்களை மிரட்டலாம், பணிய வைக்கலாம் என்று நினைத்தால், தி.மு.க.வுக்கும் சரி, அவர்களின் உதவியை நாடி வந்தவருக்கும் சரி, இது முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் மட்டும் கூட்டுப்பாலியல் என்பதை தினந்தோறும் நாம் கேள்விப்பட்டு கொண்டிருக்கின்றோம். இதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் இந்த காவல்துறை தி.மு.க.வின் தொண்டர் படையாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முழுக்க முழுக்க தி.மு.க.வினுடைய தொண்டர்களாக மாறி செயல்பட்டு கொண்டிருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

October 6, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

செவிலியர்கள் போராட்டம்: கைது நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

October 6, 2026
ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

October 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.