தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (அக்.6) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த கே.பி. கார்த்திகேயன் ஐஏஎஸ், பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த பிரியங்கா ஐஏஎஸ், தமிழக அரசின் மின் ஆளுகை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பையும் அவர் கவனிப்பார்.
மேலும், அயலகப் பணியிலிருந்து திரும்பிய பி. விஷ்ணு சந்திரன் ஐஏஎஸ், எல்காட் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.





















