ஆர்.ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேன்டஸி திரைப்படமான ‘ட்ரோன்ஸ்’ அக்டோபர் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது. “ஒரு பித்துக்குளி படை, ஒரு கற்பனை உலகம், முடிவில்லா பொழுதுபோக்கு. ‘ட்ரோன்ஸ்’ அக்டோபர் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது” என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ரியலிஸ்ட் ஃபேன்டஸி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, ‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார்.





















