வறுமையால் வாடும் எளிய குடும்பங்களுக்கு தன்னால் இயன்ற நிதிஉதவியை வழங்கி, அவர்களின் வாழ்க்கையின் துயர் துடைப்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் விளங்குபவர் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி அவர்கள்.
கோவை மாவட்டம், சுகுணாபுரம் பகுதியில் வசித்து வரும் சையத் அலி என்பவர் சிறுதொழில் வியாபாரியாக உள்ளார். எதிர்பாராத விதமாக அவரது வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் அவரால் குடும்பம் நடத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் அவரது குடும்பம் அன்றாட உணவிற்குக் கூட வழியின்றித் தவித்தது. குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளுக்குப் பணம் இல்லாமல் சிரமப்ப சிரமப்பட்டனர்.
இவரது துயர நிலையை அறிந்த முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி அவர்கள் உடனடியாக மருத்துவச் செலவு மற்றும் அவசரத் தேவைகளுக்காக ரொக்கத் தொகையை சையத் அலியிடம் வழங்கினார்.மேலும், குடும்பத்திற்குத் தேவையான அத்தனை உதவியையும் அளிப்பதாக உறுதி அளித்தார்.
இது போன்ற உதவிகள் ஏழை எளியவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.





















