நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறைக்காக ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வரும் 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் கோயில்களுக்கு திருப்பணி மற்றும் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் 250 கோயில் குளங்கள், 75 மரத்தேர்கள் சீரமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 1000 ஆண்டுகள் பழமையான 213 கோயில்கள் புனரமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.





















