சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,160 அதிகரித்துள்ளது. இதன்மூலம், கடந்த 2 தினங்களில் மட்டும் ரூ.4,400 உயர்ந்து வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,240 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து 13,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டநிலையில் மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.1,07,840 க்கு விற்பனையானது.
சென்னையில், இன்று ஒரே நாளில் (ஆகஸ்ட் 06) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,160 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.270 உயர்ந்து ரூ.13,750க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 250 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




















