நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, வெள்ளத்தில் சிக்கி மாயமான 4 ஆயிரத்து 200 பேரைத் தேடும் பணி தொடர்ந்து 9-வது நாளாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


















