• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: நவம்பர் 2-ல் நீலகிரி, திருவள்ளூரில் கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: நவம்பர் 2-ல் நீலகிரி, திருவள்ளூரில் கனமழை எச்சரிக்கை

October 31, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

October 31, 2026
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர் நேரில் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர் நேரில் மரியாதை

October 30, 2026
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: காலையில் சரிவு… மாலையில் உயர்வு!

சென்னையில் அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 சரிவு!

October 30, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது – வானிலை ஆய்வு மையம் தகவல்

October 30, 2026
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – நவம்பர் 1ஆம் தேதி தேர்வு!

TNPSC தேர்வுகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

October 30, 2026
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். நடராஜன் நியமனம்

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். நடராஜன் நியமனம்

October 30, 2026
ரூ.100 கோடி தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

ரூ.400 கோடி முறைகேடு புகார்: அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

October 30, 2026
பசும்பொன் தேவர் ஜெயந்தி – திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து எஸ்.பி. வேலுமணி மரியாதை

பசும்பொன் தேவர் ஜெயந்தி – திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து எஸ்.பி. வேலுமணி மரியாதை

October 30, 2026
பசும்பொன் தேவர் திருமகனாரின் தியாகத்தையும் தொண்டையும் போற்றி வணங்குகிறேன் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பசும்பொன் தேவர் திருமகனாரின் தியாகத்தையும் தொண்டையும் போற்றி வணங்குகிறேன் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

October 30, 2026
கவுண்டம்பாளையம் பகுதி நிர்வாகி மறைவு: குடும்பத்தினருக்கு  முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆறுதல்.

கவுண்டம்பாளையம் பகுதி நிர்வாகி மறைவு: குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆறுதல்.

October 29, 2026
நாளை விண்ணில் பாய்கிறது NVS-03 செயற்கைக்கோள்

நாளை விண்ணில் பாய்கிறது NVS-03 செயற்கைக்கோள்

October 29, 2026
மின்வெட்டை சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல்

மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம் – டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு

October 29, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, October 31, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Uncategorized

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: நவம்பர் 2-ல் நீலகிரி, திருவள்ளூரில் கனமழை எச்சரிக்கை

by admin1
October 31, 2026
in Uncategorized
0
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: நவம்பர் 2-ல் நீலகிரி, திருவள்ளூரில் கனமழை எச்சரிக்கை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: நவம்பர் 2-ம் தேதி நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று (அக். 30) நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக். 31) காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

இது காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன்பிறகு 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறக்கூடும்.

இந்த புயல் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ம் தேதி மாலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நகரக்கூடும்.

வளிமண்டல சுழற்சி

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் கேரளா-கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

தமிழகத்தில் மழை முன்னறிவிப்பு

அக்டோபர் 31: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவம்பர் 1: வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 2: நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 3: கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில இடங்கள், காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 4: தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 5, 6: தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையின் வானிலை

இன்று (அக். 31) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

நாளை (நவ. 1) நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

நவம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 4-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 90 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 100 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நவம்பர் 1, 2-ம் தேதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை.

Share196Tweet123
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

October 31, 2026
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: நவம்பர் 2-ல் நீலகிரி, திருவள்ளூரில் கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: நவம்பர் 2-ல் நீலகிரி, திருவள்ளூரில் கனமழை எச்சரிக்கை

October 31, 2026
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர் நேரில் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர் நேரில் மரியாதை

October 30, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.