தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். நடராஜனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமை தகவல் ஆணையராகப் பதவி வகித்து வந்த ஷகீல் அக்தரின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகவல் ஆணையர்களாக மகாலட்சுமி, ஷபீர், மீனா மற்றும் மகாலிங்கம் ஆகிய நான்கு பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர்கள், பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















