தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த விடுதலைப் போராட்ட வீரர், ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்கள், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய தேசப்பற்றாளர்.
ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாளையே அர்ப்பணித்த அவரது தியாகமும், தேசப்பற்றும், சமூகத் தொண்டும் என்றென்றும் போற்றுதலுக்குரியவை.
அன்னாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளில், அவரது தியாகங்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து, பெருமதிப்புடன் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.













