தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் நவம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனைத் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா தெரிவித்துள்ளார்.
முக்கியக் கோரிக்கைகள் என்னென்ன?
- பொது விநியோகத் திட்டத்திற்குத் தனித்துறை உருவாக்க வேண்டும்.
- அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்களை நியமிக்க வேண்டும்.
- கல்வித் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்.
- ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியை முறையாகச் செலுத்த வேண்டும்.
- ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.
- ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.





















