தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாகப் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதனை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விசாரணையின்போது அன்பில் மகேஷை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும், உரிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், தினமும் வழக்கறிஞரைச் சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.





















