தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டத்திற்கு 2026-2027ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் ரூ.7,432 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இந்த வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவித்தார்
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432.58 கோடி ஒதுக்கீடு.
கும்பகோணம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
மண்வள பாதுகாப்புக்காக சிறப்பு ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு.
பயறு மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்கள் உற்பத்தி இயக்கத்திற்கு ரூ.203.64 கோடி ஒதுக்கீடு.




















