Sony LIV-ன் மலையாள Original தொடரான ‘EYES’ காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகின்றது, அக்டோபர் 9 முதல்..
காதல் எப்படி மெல்ல மெல்ல கட்டுப்பாடாகவும், பயமாகவும் மாறுகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Sony LIV-ன் புதிய மலையாள Original தொடரான ‘EYES’, அக்டோபர் 9-ந்தேதி வெளியாகிறது.
காதல், அதீத ஈடுபாடு, கட்டுப்பாடு எல்லை மீறும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை காவல்துறை அதிகாரியான டினா செபாஸ்டியன் விசாரிக்கத் தொடங்குகிறார். இந்த கதாபாத்திரத்தில் கனி குஸ்ருதி நடித்துள்ளார்.
விசாரணை நகர நகர, காதலுக்கும் ஆபத்துக்கும் இடையிலான எல்லைகள் மங்கத் தொடங்குகின்றன. பயம், பாதுகாப்பின்மை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் டினாவை எதிர்கொள்கின்றன. உண்மையை நெருங்கும் ஒவ்வொரு கட்டத்திலும், அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன.
இந்தத் தொடரை இயக்கியுள்ள மனு அசோகன் கூறுகையில், “ஒருவரை பின்தொடர்வது என்பது வெறும் குற்றம் மட்டுமல்ல. அது ஒருவரின் பாதுகாப்பையும் மனநிலையையும் ஆழமாக பாதிக்கக்கூடியது. இந்த உண்மையை சுவாரஸ்யமான த்ரில்லர் வடிவில் சொல்ல முயற்சித்துள்ளோம். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பு தொடரை சிறப்பாக உருவாக்க உதவியது. பார்வையாளர்கள் இந்தத் தொடருடன் இணைந்து, இந்த விஷயத்தை புதிய கோணத்தில் பார்க்கத் தொடங்குவார்கள் என நம்புகிறேன்” என்றார்.
மனு அசோகன் இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு பாபி–சஞ்சய் திரைக்கதை எழுதியுள்ளனர். அஞ்சனா நாயர் கதையை உருவாக்கியுள்ளார். ‘Uyare’, ‘Kaanekkaane’ படங்களுக்குப் பிறகு மனு அசோகன்–பாபி–சஞ்சய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படைப்பு இது.
Dream Katcher தயாரித்துள்ள ‘EYES’ தொடரில் நிகிலா விமல், தேவ் மோகன், சானியா ஐயப்பன், ஸ்ருதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘EYES’ தொடர் அக்டோபர் 9-ந்தேதி முதல் Sony LIV-ல் மட்டும் வெளியாகிறது.





















