டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே உள்ள இந்த கட்டிடம் நேற்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், போலீஸார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிடம் இடிந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விடுதி உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.





















